search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் காணிக்கை"

    • 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    • மண்டல பூஜை இன்று நடக்கிறது.

    நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது.

    மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவதாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ 193 கிராமும், வெள்ளி 15 கிலோவும், 234 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது.
    • ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேண்டுதலாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் வருகிறது.

    அதன்படி கடந்த மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.100 கோடியைத் தாண்டியது. ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது. ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.122.8 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

    • 1.31 கிலோ வெள்ளி கிடைத்தது
    • ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை யாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

    இவ்வாறு பவுர்ணமிக்கு பிறகு, பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
    • பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

    பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இதில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆய்வாளர் ஸ்ரீ மாணிக்கம் மற்றும் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

    • கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    ஆய்வாளர் தேன்மொழி முன்னிலையில் 20 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன.

    திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் குழுவினர், சென்னிமலை மகளிர் குழுவினர், பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    • 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளி
    • பணத்தை எண்ணும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள புத்துக்கோவில் கிராமத் தில் மிகவும் பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

    மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் , அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் கோவிலில் பக் தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது . வேலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில் வாணியம்பாடி சரக ஆய்வர் ரவிக்குமார், செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் , உண்டியல்களில் ரூ .13 லட்சத்து 79 ஆயிரத்து 893 ரொக்கமாகவும் , 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .

    • கடந்த மாதம் 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக் கடன் வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில் கடந்த மாதம் தினமும் ரூ.4 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது. அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானது.

    22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.

    கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.139.33 கோடி உண்டியல் வசூலானது.

    ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூலானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

    இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.1500 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×